உள்ளூர் செய்திகள்

எரிவாயு தகனமேடை மீண்டும் பழுதால் பொதுமக்கள் அவதி

Published On 2023-09-11 15:08 IST   |   Update On 2023-09-11 15:08:00 IST
  • எரிவாயு தகன மேடை ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
  • இதனால் இறந்தவர்களின் சடலங்கள் தகரகொட்டகையில் வைத்து எரியூட்டப்படுகிறது.

சீர்காழி:

சீர்காழி ஈசானியத்தெரு வில் குப்பை கிடங்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகனமேடை உள்ளது.

சீர்காழி நகரில் இறக்கும் நபர்களின் சடலங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு சம்பிரதாய முறைப்படி இயந்திரம் மூலம் எரியூட்டப்படுவது வழக்கம்.

இதனிடையே பராமரிப்பு பணிக்காக எரிவாயு தகனமேடை இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு, எரிவாயு தகன மேடை ரூ. 8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்நிலையில் தகனமே டை எந்திரம் மீண்டும் பழுதாகிவிட்டது.

இதனால் எரிவாயு தகனமேடைக்கு வரும் இறந்தவர்களின் சடலங்கள் வெளிப்புறத்தில் தகரகொட்டகையில் வைத்து எரியூட்டப்படுகிறது.

இதனால் புகை மூட்டம் அதிகமாகி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆகையால் நகராட்சி நிர்வாகம் நவீன எரிவாயு தகனமேடை இயந்திர பழுதினை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News