உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலெக்டர் சரயு பேசிய போது எடுத்த படம்.

அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி வழங்க கலெக்டர் அறிவுரை

Published On 2023-09-09 09:47 GMT   |   Update On 2023-09-09 09:47 GMT
  • தேர்ச்சி குறைவாக உள்ள 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேர்வுகள் நடத்த வேண்டும்.
  • வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அரசு மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மார்ச் 2023 தேர்ச்சி குறித்த பகுப்பாய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சரயு பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளை சிறப்பு கவனம் செலுத்தி, வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள 25 பள்ளி தலைமை ஆசிரியர் வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி தினந்தோறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மெதுவாக கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று தேர்ச்சி குறைவாக உள்ள 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேர்வுகள் நடத்த வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பாட வாரியாக சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் மேம் பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்பு களைப் பெற நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.

இதன் வாயிலாக சேகரிக் கப்படும் நிதி தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவ லர்கள் மணிமேகலை (கிருஷ்ணகிரி), கோவிந்தன் (ஓசூர்), மாவட்டத் திட்ட அலுவலர் வடிவேலு, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் பள்ளி தலைமையா சிரியர்கள், உதவி தலை மையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News