உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் - ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- 2022-2023 ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டபணிகள் குறித்து நடைப்பெற்றது.
- தொகுதி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட திட்டப் பணிகளின் நிலை குறித்தும், 2022-2023 ஆம் ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும், ஆய்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில், நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கூடுதல் ஆட்சியர், நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி செயற்பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.