உள்ளூர் செய்திகள்
தொடர் விடுமுறை எதிரொலி: கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
- தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
- ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
கொடைக்கானல்:
புனித வெள்ளி உள்ளிட்ட 3 நாள் தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
குளு, குளு சீசனை அனுபவித்து மகிழ்ந்தனர். நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன், நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.