உள்ளூர் செய்திகள்
ஓமலூர் அருகே நிலத்தகராறில் கண்டக்டருக்கு வெட்டு
- நல்லப்பன் (வயது 50). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
- நல்லப்பன் தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில், சகாதேவன், அவரது மகன் ஷங்கர் ஆகியோர் நல்லப்பனை கத்தியால் குத்தினர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லப்பன் (வயது 50). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், நல்லப்பனுக்கு சொந்தமான நிலத்தில், அதே பகுதியை சேர்ந்த சகாதேவன் (65), அவரது மகன் ஷங்கர் (39) ஆகியோர் கற்களை போட்டதாக கூறப்படுகிறது.
இதனை நல்லப்பன் தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில், சகாதே வன், அவரது மகன் ஷங்கர் ஆகியோர் நல்லப்பனை கத்தியால் குத்தினர். பலத்த காயமடைந்த நல்லப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சகாதேவன் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.