உள்ளூர் செய்திகள்

செத்து மிதக்கும் மீன்களை நகராட்சி தலைவர் பார்வையிட்ட காட்சி.

செத்து மிதக்கும் மீன்களை நகராட்சி தலைவர் பார்வையிட்டார்

Published On 2022-12-20 14:31 IST   |   Update On 2022-12-20 14:31:00 IST
  • அம்மன் குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுவிற்கு தகவல் கொடுத்தனர்.
  • மேலும் இதுகுறித்து மீன் வளர்ப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தெரிவித்தார்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மன் குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுவிற்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து நகராட்சி பொறியாளர் சண்முகம், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன், நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ், நகர தி.மு.க. துணைச் செயலாளர் ராஜவேல் உள்ளிட்ட பலர் மீன்கள் எப்படி செத்தன? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

அலங்கார மீன் தொட்டி களில் தொட்டிகளை சுத்தம் செய்யும் டேங்க் பிஷ் எனப்படும் குறிப்பிட்ட வகை மீன்கள் அம்மன் குளத்திற்கு வந்து சேர்ந்தது எப்படி? அந்த வகை மீன்கள் மட்டும் மட்டும் இறந்து மிதப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இதுகுறித்து மீன் வளர்ப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தெரிவித்தார். அதோடு செத்து மிதக்கும் மீன்களை நகராட்சி தூய்மை பணியா ளர்களைக் கொண்டு அகற்றும் பணியையும் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Tags:    

Similar News