200 லிட்டர் சாராய ஊரல்கள் அழிப்பு; ஒருவர் கைது
- சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் சாராய கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூமிக்கு அடியில், பேரல்களில் 200 லிட்டர் சாராய ஊரல்கள் புதைத்து வைக்கப்ப ட்டிருந்தை கண்டு பிடித்தனர்.
பின்னர் 200 லிட்டர் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கண்டிய ன்காடு பகுதியை சேர்ந்த குழந்தை வேல் என்பவரை கைது செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஹர்ஷ் சிங் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும், மேலும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.