தி.மு.க. சார்பில் தெருமுனை கூட்டம்
- பாவூர்சத்திரம் பஸ் நிலையம் முன்பு நடந்த தெருமுனை கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
- கூட்டத்தில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
தென்காசி:
மத்திய அரசை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன தெருமுனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் பஸ் நிலையம் முன்பு நடந்த தெருமுனை கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன், தலைமைக் கழக பேச்சாளர் சரத்பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், நாடாளுமன்ற தேர்தலில் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை மத்திய பா.ஜ.க. அரசு, நிறைவேற்ற வேண்டும் என கூறி கோஷம் எழுப்பப்பட்டது.
இதில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், தென்காசி ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, பேரூராட்சி தலைவர் ராஜன், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.