உள்ளூர் செய்திகள்

சென்னையில் நாய் கண்காட்சி

Published On 2025-01-18 14:17 IST   |   Update On 2025-01-18 14:17:00 IST
  • பல்வேறு போட்டிகளில் நாய்கள் பங்கேற்றன.
  • செல்லப் பிராணிகளான நாய்கள் விதவிதமாக வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

சென்னை:

சென்னையில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சமயத்தில் நாய் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் தாங்கள் வளர்க்கும் நாய்களுடன் வந்து கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான நாய் கண்காட்சி இன்று (சனிக்கிழமை) சென்னை மயிலாப்பூர் லைட் அவுஸ் அருகில் உள்ள பெட்ஸ் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.

கண்காட்சியில் கீழ்படிதல் சோதனைகள் மற்றும் 2 சிறப்பு நிகழ்ச்சிகள் நாய்களுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பல்வேறு போட்டிகளில் நாய்கள் பங்கேற்றன.

செல்லப் பிராணிகளான நாய்கள் விதவிதமாக வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இன்று நாய்களுக்கான தனித் திறமைகள் மற்றும் அழகு போட்டியும் நடத்தப்பட்டது.

நாளை, அனைத்து வகை நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். இறுதியில் பரிசளிப்பு விழா நடைபெறும்.

அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளனர்.

Tags:    

Similar News