உள்ளூர் செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் உயிரிழப்பு
- அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் சென்று விட்டு, வடக்குப்பட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
திருக்கழுக்குன்றம் போலீசார் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.