கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
- சாலை அமைக்கும் பணியில் ஊழியர்கள்மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர்.
- கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளுக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கூடலூரில் இருந்து மந்தைவாய்க்கால் வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அதிகாரிகள் மேற்பார்வை இல்லாமல் ஊழியர்களே ஈடுபட்டு வருவதால் அடிக்கடி குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்வது வாடிக்கையாக உள்ளது.
நேற்று இரவு கூடலூரில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் அரசு கள்ளர் பள்ளி அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு நீரூற்று போல தண்ணீர் வெளியேறி வீணாகி செல்கிறது. இது குறித்து இன்று அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு புகார்அளித்தனர். அடிக்கடி இதுபோல குழாய் உடைப்பு ஏற்படுவதால் மெத்தனமாக பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் மேற்பா ர்வையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.