உள்ளூர் செய்திகள்

உத்தனப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு

Published On 2023-04-22 15:31 IST   |   Update On 2023-04-22 15:31:00 IST
  • பள்ளி பருவத்தில் ஒழுக்கம், கல்வி கற்றல், ஒற்றுமை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்
  • நன்கு படித்து பல்வேறு துறைகளில் அதிகாரியாக விளங்க வேண்டும்

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உத்தன ப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உத்தனப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் குமுதா மற்றும் காவலர்கள் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வை பற்றி எடுத்து கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மேலும் பள்ளி பருவத்தில் ஒழுக்கம், கல்வி கற்றல், ஒற்றுமை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என எடுத்துரைத்தார். இந்த கல்வி பருவத்தில் போதை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடாமல், நன்கு படித்து பல்வேறு துறைகளில் அதிகாரியாக விளங்க வேண்டும் என அறிவுறை கூறினார்.

Tags:    

Similar News