உள்ளூர் செய்திகள்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது
- அணையில் இருந்து 1205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 784 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 1205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.