உள்ளூர் செய்திகள்

வால்பாறை அருகே மளிகை கடைகளை உடைத்து பொருட்களை சூறையாடிய காட்டு யானைகள்

Published On 2024-12-30 08:50 GMT   |   Update On 2024-12-30 08:50 GMT
  • எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
  • மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரா எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

வனத்தை விட்டு வெளி யேறி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்து, வீடுகளையும், கடைகளையும் சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை அருகே உள்ள முடீஷ் பகுதியில் 2 தினங்களாக 13 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. நேற்று நள்ளிரவு 2 மணியளவில் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி முடீஸ் பகுதிக்குள் நுழைந்தது.

அங்கு வெகுநேரமாக சுற்றித்திரிந்த காட்டு யானைகள், மணிவண்ணன், கண்ணன் ஆகியோரின் மளிகை கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. உள்ளே இருந்த பொருட்களையும் தூக்கி போட்டும், தின்றும் சூறையாடி சென்றது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.

ஊருக்குள் யானை நுழைந்தது குறித்து வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மானாம்பள்ளி வன சரகர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனத்திற்குள் விரட்டினர். குடியிருப்பு பகுதிக்குள் யானை நுழைந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News