உள்ளூர் செய்திகள்

எல்லை குமாரபாளையத்தில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடக்கிறது.

கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டும் பணி விறு விறுப்பு

Published On 2023-07-09 09:19 GMT   |   Update On 2023-07-09 09:19 GMT
  • 3 பாலங்களும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
  • கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னிமலை:

சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமையான பாலங்களான மண்ணாங்காடு வாய்க்கால் பாலம், எல்லை குமார பாளையம் வாய்க்கால் பாலம் மற்றும் எக்கட்டாம் பாளையம் ஊராட்சியில் உள்ள புதுவலசு வாய்க்கால் பாலம் ஆகிய 3 பாலங்களும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

இதனால் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே இருந்த மண்ணாங்காடு வாய்க்கால் பாலம் மற்றும் எல்லை குமாரபாளையம் வாய்க்கால் பாலம் ஆகிய 2 பழுதடைந்த பாலங்களையும் அகற்றிவிட்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் கூடுதல் அகலத்துடன் புதிய பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் புதுவலசு வாய்க்கால் பாலம் மட்டும் ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பதற்கு முன்பு புதிய பாலங்கள் கட்டும் பணி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News