உள்ளூர் செய்திகள்

மகன் சாவில் மர்மம்: தந்தை போலீசில் புகார்

Published On 2022-09-02 13:29 IST   |   Update On 2022-09-02 13:29:00 IST
  • பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தோஷ் குமார் கடந்த ஒரு வருடமாக கொத்தமங்கலத்தில் தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
  • இந்த நிலையில் சம்பவதன்று இரவு சந்தோஷ்குமார் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

கோவை பெரிய நாயக்கன்பாளைத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மூத்த மகன் சந்தோஷ்குமார் (33). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள சந்தோஷ்குமார் ஷீட் மெட்டல் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கு கடந்த 2013-ல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம், இந்திரா நகரை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தோஷ் குமார் கடந்த ஒரு வருடமாக கொத்தமங்கலத்தில் தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவதன்று இரவு சந்தோஷ்குமார் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தோஷ்குமாரின் தந்தை ஆறுமுகம், தம்பி விமல்ராஜ் ஆகியோர் சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது இரவு சுமார் 8 மணியளவில் சந்தோஷ்கு மார் கஞ்சி குடித்ததாகவும், அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவரை சத்தியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் உயர் சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு டாக்டர்கள்ள் பரிசோத்த பின், சந்தோஷ்கு மார் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக, சந்தோஷ்குமாரின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரி ன்பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News