மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- மனுக்களை பொற்றுக்கொண்ட அவர் ஒரு பயனாளிக்கு உடனடியாக சைக்கிள் வழங்கினார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் மாதம் தோறும் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதனடிப்படையில் கோபி கோட்டாட்சியர் திவ்யபிரிய தர்ஷினி தலைமையில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ்வ ரன் முன்னிலையில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கோபி, நம்பியூர், பவானி, சத்தி, தாளவாடி, அந்தியூர் தாலுகாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு செல்போன், சைக்கிள், வீட்டு மனை பட்டா, மாற்று த்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், காது கேளாதோருக்கான கருவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினியிடம் அளித்தனர்.
மனுக்களை பொற்றுக்கொண்ட அவர் ஒரு பயனாளிக்கு உடனடியாக சைக்கிள் வழங்கினார்.
முகாமில் மாற்றுத்திற னாளிகள் மாவட்ட நல அலுவலர் கோதை செல்வி, சத்தி சமுகநலத்துறை தாசல்தார் மாரிமுத்து, நம்பியூர் சமூக நலத்துறை வட்டாட்சியர் துரைசாமி, தாளவாடி துணை தாசல்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.