உள்ளூர் செய்திகள்
ஆழ்வார்திருநகரியில் ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடைவிழா
- கோவில் கொடைவிழவையொட்டி பால்குடம், கணபதி ஹோமம், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா நெய்வேத்தியத்துடன் தீப ஆராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
- விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி குண்டுத்தெருவில் உள்ள ஈசான உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் நேற்று கொடை விழா நடைபெற்றது.
காலையில் பால்குடம், கணபதி ஹோமம், யாக பூஜை மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் மற்றும் மஹா நெய்வேத்தியத்துடன் தீப ஆராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.