உள்ளூர் செய்திகள்
சட்டசபைக்கு வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
- கடந்த மாதம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலை சட்டசபைக்கு வந்தார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்) தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த மாதம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை சட்டசபைக்கு வந்தார். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு உடனே புறப்பட்டு சென்றார்.