உள்ளூர் செய்திகள்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
- 7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
- 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது.
7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. 2-வது அலகில் மட்டும் மின்உற்பத்தி நடந்து வந்தது. இந்த நிலையில் 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த அலகில் 220 மெகாவாட் மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 1-ந்தேதி 2-வது அலகில் மின் உற்பத்தி தொடங்கும்" என்றனர்.