உள்ளூர் செய்திகள்

இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல்; 3 பேர் கைது

Published On 2023-09-11 16:34 IST   |   Update On 2023-09-11 16:34:00 IST
  • 4 பேரும் சேர்ந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் நரேஷ் (வயது 25) .

இவருக்கும் அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன், விக்னேஷ் ஆகியோருக்கும் அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு இரு தரப்பும் சமாதானம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சம்பவதன்று வடகால் கடைவீதிக்கு வந்த நரேஷை, மணிகண்டன்,மணிமாறன் உள்ளிட்ட4 நபர்களும் சேர்ந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது நண்பர்களான ராஜா, பாக்கியராஜ் வந்தனர். அவர்களையும் மணிகண்டன் கும்பல் தாக்கியது.

பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இருதரப்பினரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்த நரேஷ்,ராஜா,பாக்கியராஜ் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த மணிகண்டகனுக்கு காயம் ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ், மணிமாறனையும், மற்றொரு தரப்பில் ஒருவரையும் புதுப்பட்டினம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News