உள்ளூர் செய்திகள்
தேனி கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு
- தேனி மாவட்ட கலெக்டர் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி உள்ளனர்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள், பொதுமக்களை கலெக்டர் நலம் விசாரிப்பது போன்றும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதுபோலும் குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்ய முயற்சித்து வருகின்றனர்.
இது குறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ்டோங்கரே அறிவுறுத்தி உள்ளார்.