உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Published On 2022-06-22 11:11 IST   |   Update On 2022-06-22 11:11:00 IST
  • தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது.
  • விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி:

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24-ந் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்து பயன்பெறவும், மேலும் தங்களது குறைகளை மனுக்களாக குறைதீர் தின கூட்டத்தில் வழங்கிடலாம்.

விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது கண்காணித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News