உள்ளூர் செய்திகள்

விற்பனைக்காக கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள்.

கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2023-01-07 10:46 GMT   |   Update On 2023-01-07 10:46 GMT
  • விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை விற்க முடியாமல் காத்து கிடக்கின்றனர்.
  • விவ–சாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ராராமுத்திரகோட்டை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பலர் தாங்கள் அறுவடைசெய்த நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர்.

கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

Tags:    

Similar News