உள்ளூர் செய்திகள்

சூலூர் குளத்தில் கொட்டப்பட்ட மீன்-கோழி கழிவுகள்

Published On 2022-11-04 14:42 IST   |   Update On 2022-11-04 14:42:00 IST
  • நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அடைந்து வருகின்றன.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூலூர்,

கோவை சூலூரில் பெரிய குளம் மற்றும் சிறிய குளம் என 2 குளங்கள் உள்ளன.

மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு பெருமை வாய்ந்த இந்த குளங்களில் நொய்யல் ஆற்றில் வரும் அதிகப்படியான மழை நீரை சேமித்து வைத்து இப்பகுதி விவசாயிகள் தங்கள் பாசனத்திற்கு பய ன்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் நூற்றுக்க ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அடைந்து வருகின்றன. மேலும் இந்த குளத்தில் மீனவர்கள் மீன் குஞ்சுகளை வளர்த்து மீன்பிடித் தொழிலும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவத்த ன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் டன் கணக்கான மீன் மற்றும் கோழி கழிவுகளை ஒரு வாகனத்தின் மூலம் எடுத்து வந்து குளக்கரையில் நிறுத்தி குளத்திற்குள் கொட்டி உள்ளனர்.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நீரும் மாசடையும் சூழல் உருவாகி உள்ளது. நள்ளிரவு நேரத்தில் வாகனம் வந்ததால் அதனை அடையாளம் காணவோ, பிடிக்கவோ முடியவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெ ரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News