உள்ளூர் செய்திகள்

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணம்.

சுவாமிநாத சுவாமி கோவிலில் எவ்வித கட்டணமுமின்றி நடந்த மாற்றுத்திறனாளிகள் திருமணம்

Published On 2022-11-21 15:07 IST   |   Update On 2022-11-21 15:07:00 IST
  • தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்தி றனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும்.
  • அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.

சுவாமிமலை:

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி திருக்கோ யிலுக்கு செலுத்தவேண்டிய எவ்விதக் கட்டணமும் இல்லாமல் மாற்றுத்தி றனாளி திருமணம் நேற்று நடைபெற்றது.

தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

அதன்படி நேற்று கும்பகோணம் தாலுக்கா, அண்ணலக்கிரஹாரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணப்பெண் தேவி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த பிரபு என்பவருக்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கோயில் துணை ஆணையர் உமாதேவி மணமக்களுக்கு பட்டுப் புத்தாடைகள், கோயில் பிரசாதங்கள் வழங்கினார்.

நிகழ்வில் கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News