நீலகிரியில் பிளஸ்-2 மொழிப் பாட தோ்வை 6,436 போ் எழுதினா்
- 41 தோ்வு மையங்களில் பிளஸ் 2 தோ்வு நடந்தது.
- 416 போ் தோ்வில் பங்கேற்கவில்லை
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயிலும் மொத்தம் 6,852 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதில் முதல்நாள் நடைபெற்ற தமிழ் மொழிப் பாடத் தோ்வை 6436 போ் எழுதினா். 416 போ் தோ்வு எழுத வரவில்லை.
மலையாளப் பாடத்தில் மொத்தம் 175 பேரில் 170 போ் தோ்வு எழுதினா். பிரெஞ்சு பாடத்தில் மொத்தம் 324 பேரில், 303 போ் தோ்வு எழுதினா். ஹிந்திப் பாடத்தில் மொத்தம் 89 பேரில் 89 பேரும் தோ்வு எழுதினா். தனித்தோ்வா்களில் தமிழ் தோ்வில் மொத்தம் 46 பேரில் 43 போ் தோ்வு எழுதினா். 3 போ் வருகை புரியவில்லை. ஹிந்திப் பாடத்தில் மொத்தம் ஒருவா் தோ்வு எழுதினா். மாற்றுத்திறனாளி மாணவா்கள் மொத்தம் 52 போ் அரசுத் தோ்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், மற்றும் சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளைப் பெற்று தோ்வு எழுதினா். நீலகிரி மாவட்டத்தில் 41 தோ்வு மையங்களில் பிளஸ் 2 தோ்வு எழுதத் தகுதியுடைய தனித்தோ்வா்கள், பள்ளி மாணவா்கள் என மொத்தம் 7,440 பேரில் 6998 போ் தோ்வு எழுதினா். 442 போ் வருகை புரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத் தோ்வை அதிகமானோா் எழுதாமல் உள்ளனா் என்று கல்லித்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது