உள்ளூர் செய்திகள்

புனித தீர்த்தம் ஐந்து யானைகள் மேல் வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

மயிலாடுதுறையில் யானைகள் மேல் புனித தீர்த்த ஊர்வலம்

Published On 2023-09-07 16:16 IST   |   Update On 2023-09-07 16:16:00 IST
  • தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 10-ந்தேதி நடைபெறுகிறது.
  • புனித நீர் 5 யானைகள் மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

குரு பரிகார ஆலயமான இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது.

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம்10-ந்தேதி நடைபெறுகிறது .

இதற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இதனை முன்னிட்டு காவிரி நதியில் புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாலச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் வேத விற்ப்பனர்கள் மந்திரம் ஓத கடங்களில் புனித நீர் எடுக்கப்பட்டு 5 யானைகள் மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஊர்வலத்தில் வெள்ளை குதிரைகள், ஒட்டகம், பசு மாடு, பங்கேற்றன.

சிலம்பாட்டம், கோலாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் கடவுளர்கள் போல் வேடம் அணிந்தபடி பங்கேற்ற நிலையில் வேத மந்திரங்கள் மற்றும் தேவார பதிகங்கள் ஓதியபடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே ஆலயத்தை வந்தடைந்தது.

தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் புனித கடங்கள் ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டது.

நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் அகோரம், திருக்கடையூர் கோயில் கூடுதல் கண்காணிப்பாளர் மணி, நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் சிவக்குமார் கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News