சங்கராபுரத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது
- 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வீட்டை விட்டு விரட்டி இருக்கின்றனர்.
- இலாகி உள்ளிட்ட 9 பேரும் சேர்ந்து மாஜிதாவை கொலை மிரட்டல் விடுத்த தாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் இலாகி (வயது 53). இவரது மனைவி மாஜிதா (45). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதுவரை குழந்தை இல்லை. இந்த நிலையில் மாஜி தாவை அவரது கணவர் இலாகி மற்றும் கொழுந்த னார் கலீம் (50), கலிம் மனைவி ஷர்மிளா, நஜு புதீன் மனைவி மலிகா, சாதிக் பாஷா மனைவி பர்வீன், ஜாபீர் என்கிற ஜாபர், சாதிக்பாஷா ஷாஹேர் மற்றும் இலாகி யின் 2-வது மனைவி பரிதா ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கொடுமைப்படுத்தி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வீட்டை விட்டு விரட்டி இருக்கின்றனர்.
இந்த நிலையில் மாஜிதா சம்பவத்தன்று தனது வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லும்படி கணவர் மற்றும் அவரது குடும்பத்தி னரிடம் நியாயம் கேட்டி ருக்கிறார். இதனால் ஆத்திர மடைந்த அவரது கணவர் இலாகி உள்ளிட்ட 9 பேரும் சேர்ந்து மாஜிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாஜிதா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதிகா, மனைவியை கொடுமைப் படுத்திய கணவர் இலாகி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கணவர் இலாகியை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.