உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் விளம்பர பலகைகள் அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை

Published On 2022-09-18 13:56 IST   |   Update On 2022-09-18 13:56:00 IST
  • வாகன ஓட்டுநர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படவும், இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  • எதிர்காலத்தில் இதுபோன்ற அனுமதியற்ற விளம்பரங்கள் மீண்டும் உருவாகமல் இருக்க வேண்டும்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

கடலூர் நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள், சாலையின் மையப் பகுதிகள் பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீதுள்ள அனுமதியில்லாமல் உள்ள விளம்பர பலகைகள், டிஜிட்டல் விளம்பர தட்டிகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் அமைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் வாகன ஓட்டுநர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படவும், இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, முறைகேடான வகையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அனுமதியற்ற விளம்பரங்கள் மீண்டும் உருவாகமல் இருக்க வேண்டும். விளம்பர பலகைகள் அமைப்பதற்கான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. 

Tags:    

Similar News