உள்ளூர் செய்திகள்
ஓசூர் ராம்நகரில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில், மூலவருக்கு அபிஷேகம் செய்த போது எடுத்த படம்.
ஓசூர் சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார மற்றும் பிரதோஷ வழிபாடு
- நந்தியம் பெருமானுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தி சென்றனர்.
ஓசூர்,
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு, நேற்று கார்த்திகை கடைசி சோமவாரம் ஆகும்.
இதையொட்டி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில், நெசவுத்தெருவில் உள்ள ஸ்ரீ சோமேஸ்வரசாமி உள்ளிட்டசிவ ஆலயங்களில் மூலவருக்கு பால், தயிர்,நெய், , பஞ்சாமிர்தம், திருநீறு, மஞ்சள் குங்குமம், பன்னீர்,இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
மேலும் நேற்று பிரதோஷ நாள் கடைபிடிக்கப்பட்ட நிலையில், சிவன்கோவில்க ளில் உள்ள நந்தியம் பெருமானுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தி சென்றனர்.