உள்ளூர் செய்திகள்

பாலக்கோட்டில் சந்து கடைகளில் மது விற்பனை செய்த 2 பேர் கைது

Published On 2022-11-02 15:19 IST   |   Update On 2022-11-02 15:19:00 IST
  • மதுபானங்களை ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் மதுபானக் கடையில் இருந்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
  • மது பிரியர்களுக்கு 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது கிடைக்கிறது.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரை சுற்றி புற்றீசல் போல் பெருகிவரும் சந்து கடைகளால் சிலர் மதுபானங்களை ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் மதுபானக் கடையில் இருந்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

மது பிரியர்களுக்கு 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது கிடைக்கிறது. இதனால் தினக்கூலி செல்பவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து அதிரடி சோதனை மேற்கொண்டார்.அப்போது புதூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சரவணன், குத்தலஹள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துலிங்கம் ஆகிய இருவரை கைது செய்து. அவர்களிடம் இருந்து 40ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 400 மதுபான பாட்டிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை பாலக்கோடு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News