தஞ்சையில், பல்வேறு போட்டிகளில் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்
- 15 முதல் 17 வயதுடைய ஆண், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி.
- மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இத்தகைய நிகழ்வின் மூலம் கொண்டு செல்ல இயலும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்று த்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்ப ரிசுகள் மற்றும் சான்றிதழினை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள் ( உதவி உபகரணங்களுடன்) 12 முதல் 14 வயதுடைய ஆண், பெண் காலிபர் மற்றும் கால் தாங்கி உதவியுடன் நடப்பவர்களுக்கான 50 மீ நடைபோட்டி , 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சக்கர நாற்காலி ஓட்டப் போட்டி, 15 முதல் 17 வயதுடைய ஆண், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டி, நீளம் தாண்டுதல் போட்டி, 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் போட்டி, குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டி, பார்வைத் திறன் குறையுடையோருக்கான நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல்மா நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் விதமாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்தது. இதனை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு அந்நாளில் ஊதா நிறத்தில் முக்கிய கட்டிடங்களில் ஒளியூட்டி பிற நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இத்தகைய நிகழ்வின் மூலம் கொண்டு செல்ல இயலும்.
இந்தியாவில் முதல் முறையாக நமது தமிழ்நாட்டிலும் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2 நாட்கள் தமிழ்நாடு அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்களையும் ஊதா நிறத்தில் ஒளியூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலக பணியாளர்களையும் ஊதா நிறப்பட்டை அணிந்து, மாற்றுத்தி றனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்ரெங்கராஜன், எமாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.