நெல்லை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி- கிராமப்புற தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மனு
- கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீட்டுமனைப் பட்டா வழங்க கோரிக்கை
- 30-க்கும் மேற்பட்டோர் மனு
நெல்லை:
நெல்லை மாவட்ட தாலுகா அலுவகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி நெல்லை தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு வழங்கினர்.
கொண்டாநகரம் கிராமப்புற தொழி லாளர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று மனு கொடுக்க வந்தனர். அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர் வேலு என்பவர் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாநகரம் பகுதியை சேர்ந்த ஏழை தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், கலெக்டர் உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே இன்றைய ஜமாபந்தி நிகழ்ச்சியிலேயே விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.