உள்ளூர் செய்திகள்
ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
- 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகினர்.
- தேர்வான மாணவர் களுக்கு பணி நியமன ஆணைகளை, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் வழங்கி, மாணவர் களை பாராட்டினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்த மாணவர்க ளுக்கு கெட்ஸ்டெர் சாப்ட்வேர் என்ற தனியார் நிறுவனம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகினர்.
தேர்வான மாணவர் களுக்கு பணி நியமன ஆணைகளை, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் வழங்கி, மாணவர் களை பாரட்டினார்.
மேலும்,கல்லூரியின் மின்னியல் துறை தலைவர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் பாலாஜி பிரகாஷ் மற்றும் துறை தலைவர்கள் புவியரசு, நாகராஜன், திவாகர் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.