உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூடைகளை படத்தில் காணலாம் 

வாகன சோதனையில் ரூ. 6 லட்சம் குட்கா பறிமுதல்

Published On 2023-01-24 08:14 GMT   |   Update On 2023-01-24 08:14 GMT
  • 3 மாவட்டங்களில் சப்ளை செய்த நெல்லை வியாபாரி
  • கைதான 2 பேர் திடுக்கிடும் தகவல்கள்

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்ட மாக மாற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திய அவர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவதை தடுக்கும் வகையில் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தி னார். இதில் ரெயில் மூலம் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து கொரியர் மூலம் போதைப் பொருட்கள் வருவதை அறிந்து அவற்றை யும் கைப்பற்றினார். மேலும் போலீசாரின் நடவ டிக்கையை தீவிரப்படுத்தி யும் அவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குமரி மாவட்ட புகையிலைப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் மகேஷ் ராஜ் மற்றும் போலீசார் ஆரல்வாய் மொழியை அடுத்த முப்பந்தல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வைக்கோல் பாரம் ஏற்றிய மினி லாரி வந்தது.

அதனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அப்போது லாரியின் டிரைவர் மற்றும் அதில் வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.இதனால் வைக்கோல் பாரத்தை போலீசார் சோதனை செய்தனர்.

இதில் வைக்கோல்களுக்கு அடியில் 64 மூடைகள் இருப்பது தெரியவந்தது. அதனை வெளியே எடுத்து பார்த்த போது, தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது. பழனியில் இருந்து அதனை கொண்டு வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.அவற்றை தனிப் படையினர் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

இதனை தொடர்ந்து மினி லாரி டிரைவரான பழனி ரெட்டியார்பட்டி ஆவணி மூல வீதியைச் சேர்ந்த சித்திக் மகன் பீர்முகமது (வயது39) மற்றும் பழனி இறைநாயகன்பட்டி ராஜமாணிக்கம் மகன் மதன கோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் வாரத்துக்கு ஒரு முறை வாகனங்களில் பழனியில் இருந்து மூடை முடையாக புகையிலை கொண்டு வருவதும், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அவற்றை கடைகளுக்கு விநியோ கிப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த வர் பழனியில் மளிகை கடை வைத்துள்ளதாகவும் அவர் தான், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து குட்காவை நேரடியாக கொள்முதல் செய்து, நெல்லை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விற்பனை செய்து வருவதாக கைதான 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி குட்கா வியாபாரியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து உள்ள னர்.

தற்போது பிடிபட்ட 64 மூடைகளில் சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது என்றும் அதன் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News