உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

நாகர்கோவிலில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மகா சபாவினர் கைது

Published On 2022-12-06 09:56 GMT   |   Update On 2022-12-06 09:56 GMT
  • பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
  • கைது செய்தவர்களை கோட்டார் பகுதியில் உள்ள ஒரு சமூக நலக் கூடத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.

நாகர்கோவில்:

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று குமரி மாவ ட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குமரி மாவட்ட அகில பாரத இந்து மகா சபாவினர், காசி, மது ராவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி நாகர்கோ வில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

ஆனால் இதற்கு போலீ சார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அந்த பகுதி யில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிர மணியன் தலைமையில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ், குமரி கோட்ட செயலாளர் ஸ்ரீகண்டன், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம், மாவட்ட தலைவர்கள் ராஜ சேகர் (கிழக்கு), சபரி குமார் (மேற்கு) உட்பட பலர் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு திரண்டனர். போலீஸ் கூடுதல் சூப்பி ரண்டு ஈஸ்வரன், துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்த போலீசார், ஆர்ப்பாட்டத்திற்கு வந்த மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்பட இந்து மகா சபா நிர்வாகிகளை கைது செய்தனர். கைது செய்தவர்களை கோட்டார் பகுதியில் உள்ள ஒரு சமூக நலக் கூடத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News