உள்ளூர் செய்திகள்
பூதப்பாண்டி அருகே ரேசன் கடை ஊழியர் திடீர் மாயம்
- பூதப்பாண்டி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் கருணாநிதி
- காரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூதப்பாண்டி :
பூதப்பாண்டி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் கருணாநிதி (வயது 40). இவர் உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று மாயமாகி விட்டார். அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் நிலையில் உள்ளது. இதுகுறித்து அவரது தந்தை பூதப்பாண்டி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.