உள்ளூர் செய்திகள்
கிள்ளியூர் அருகே சமுதாய நலக்கூடம் மர்ம நபர்களால் இடிப்பு
- இடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
- கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கிள்ளியூர் அருகே உள்ள ஆப்பிகோடு பகுதியில் ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மன் ஆலயத்தையொட்டி அரசு சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் செயல்பட்டு வந்தது. இதனை அப்பகுதி மக்கள் பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சம்ப வத்தன்று ஒரு மர்ம கும்பல் அந்தக் கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கி உள்ளனர். இடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
இதுகுறித்து கிள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பதருனிஷா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆப்பிகோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன், லிஜின் உட்பட 10 பேர் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.