உள்ளூர் செய்திகள்

ஆயத்த ஆடையக உற்பத்தி நிலையம் அமைக்க பி.சி., எம்.பி.சி. பிரிவினருக்கு ரூ.3 லட்சம் கடன் உதவி - கலெக்டர் அரவிந்த் தகவல்

Published On 2022-09-13 13:48 IST   |   Update On 2022-09-13 13:48:00 IST
  • ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவை யான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை
  • 0 நபர் களை கொண்டு ஒரு குழு வாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம்.

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட மேற் கண்ட இன மக்கள் (ஆண்/ பெண்) 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவை யான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தையல் தொழிலில் ஈடு பட்டு வரும் பிற்பட்ட வகுப்பினர், மிகப்பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த (ஆண்/ பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்து பெறப்ப டும் விண்ணப்ப படிவங் கள் மாவட்ட கலெக்டரின் தலைமையில் ஏற்படுத்தப் பட்டதேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும் விண்ணப் பங்கள் 'ஆணையர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை'-க்கு பரிந்துரை செய்யப்படும்.

குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர் களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்ப டும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர் களை கொண்டு ஒரு குழு வாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம்.

குழு உறுப்பினர்கள் பிற் படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங் களுக்கு மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் தரை தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவல கத்தை தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு செய்திகுறிப் பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

Tags:    

Similar News