சுசீந்திரம் அருகே வீடு புகுந்து கர்ப்பிணிபெண் கையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல்
- புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் விசாரணை நடத்தினார்.
- தப்பி ஓடிய நபர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் அருகே உள்ள பரப்பு விளையைச் சேர்ந்த வர் ராஜன் (வயது 38), தச்சு தொழிலாளி.
அதே பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
அவர் சம்பவத்தன்று பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென அவர் அலறவே அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண், தனது வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து ராஜன் தகராறு செய்ததாக கூறினார்.
இதுபற்றி சுசீந்திரம் போலீசிலும் இளம்பெண் புகார் செய்தார். அதில், நான் வீட்டில் தனியாக இருந்த போது, ராஜன் அத்துமீறி நுழைந்தார். அவர் எனது கையைப் பிடித்து இழுத்து தகராறு செய்தார். நான் கூச்சலிட்டதால், அவர் மிரட்டினார். மேலும் உனது கணவரிடம் கூறி னால், இருவரையும் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். ஆனால் நான் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த ராஜன் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார் என குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெப கர் விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய ராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.