உள்ளூர் செய்திகள்
தக்கலை போலீஸ் நிலையத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்கு
- ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.
- ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
தக்கலை, நவ.21-
தக்கலை அருகே திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து பூக்கடை வரை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.
போலீசார் குறிப்பிட்ட நேரத்தை விட தொடர்ந்து அதிக கூட்டத்தை கூட்டி பொது தொல்லை கொடுத்து வருவதாக பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், ஆர்.எஸ்.எஸ். மண்டல பொறுப்பாளர் விசு மற்றும் மதுரை பகுதியை சேர்ந்த தென்மண்டல தலைவர் வன்னியநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.