தோவாளையில் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பொதுமக்களால் பரபரப்பு
- 5-ந் தேதி அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து கல் பதித்தனர்.
- ஆலோசனை கூட்டம் தொடர்பாக தன்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
ஆரல்வாய்மொழி :
தோவாளையில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கிருஷ்ண சாமி கோவில் உள்ளது. இதன் அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் எனும் குடியிருப்பு பகுதியும் அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் ஆகும். இங்கு 60 வீடுகளும் 2 காலிமனைகளும் உள்ளன. இந்த குடியிருப்பில் சுமார் 48 ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநி லையில் கடந்த 5-ந் தேதி அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து கல் பதித்தனர்.
இதையடுத்து கோவில் நிலம் எடுப்பு தாசில்தார் சஜித், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ் ணன், உறுப்பினர்கள் சுந்தரி, ராஜேஷ், ஜோதீஸ்குமார், ஸ்ரீகா ரியம் சேர்மராஜா ஆகியோர் கோவில் இடத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு தரை வாடகை விதிப்பது சம்பந்தமாக குடியிருப்பு வாசிகளுடன் ஆலோசனை நடத்த வந்தனர். இந்த ஆலோசனை கூட்டம் தோவாளை கிருஷ்ணசாமி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் பொதுமக்கள் தாசில்தார் மற்றும் அதிகாரிக ளிடம் சரமாரி கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, 'கோவிலுக்கு சொந்த மான இடம் இதே ஊரில் பல உள்ளது. அந்த பகுதிகளில் நடவடிக்கை எடுத்துவிட்டு இங்கு வாருங்கள்' என்று வாதிட்ட னர். இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே அங்கு வந்த தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், ஆலோசனை கூட்டம் தொடர்பாக தன்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.