கோப்பு படம்
இளம்பெண் தாக்கப்பட்ட விவகாரம்: பாரதிய ஜனதா கவுன்சிலர் தலைமறைவு
- முன் விரோதம் காரணமாக தாக்குதல்
- ண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது37). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜென்சிமலர் (35). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரபுராஜ் (38). கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிரிஜா (35). இவர் இரணியல் பேரூராட்சியில் 4-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலராக இருந்து வருகிறார்.
ஜென்சிமலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரணியல் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்திருந்தார். இதனால் இவருக்கும் கிரிஜாவுக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜென்சிமலர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். கிரிஜா வீட்டு அருகில் வந்தபோது அங்கு நின்ற பிரபுராஜ், ஜென்சிமலரை தடுத்து நிறுத்தி எங்களுக்கு தெரியாமல் குடிநீர் இணைப்பு கேட்பாயா என அவதூறாக பேசி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இருவரும் ஜென்சிமலரிடம் இருந்த செல்போன் மற்றும் ஸ்கூட்டரையும் சேதப்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இவற்றின் சேதமதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் இருக்கும்.
காயம் அடைந்த ஜென்சி மலர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பிரபுராஜ், கிரிஜா ஆகிய இருவர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள அவர்களைதேடி வரு கின்றனர்.