- கால்நடை தீவன வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது
- 30 ம் தேதி நடக்கிறது
கரூர்:
கால்நடை பல் கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில், பண்டுதகாரன்புதுாரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல் மற்றும் 'அசோலா' வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வரும், 30 ம் தேதி நடக்கிறது. இதில், அடர் தீவனம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை தேர்ந்தெடுத்தல், சமச் சீரான தீவனம் தயாரித்தல், அசோலாவில் உள்ள சத்துகள், அசோலாவை தீவனமாக கொடுக்கக் கூடிய அளவு, அசோலா உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் அசோலா வளர்ப்பு செயல் முறை விளக்கம் ஆகிய தலைப்புகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப் படவுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், நேரடியாக பயிற்சி நடக்கும் அன்று காலை 10:30 மணிக்குள் வர வேண்டும். இவ்வாறு,