அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்
- கடை திறப்புவிழா, கண்ணீர் அஞ்சலி, திருமணம் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு வகையான பிளக்ஸ் பேனர்களை வைப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
- இதற்கு பேரூராட்சி நிர்வாகத்திடமோ, போலீசாரிடமோ முறையாக அனுமதி பெறுவதே கிடையாது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் கட்சி கூட்டங்கள், கடை திறப்புவிழா, கண்ணீர் அஞ்சலி, திருமணம் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு வகையான பிளக்ஸ் பேனர்களை வைப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இதற்கு பேரூராட்சி நிர்வாகத்திடமோ, போலீ–சாரிடமோ முறையாக அனுமதி பெறுவதே கிடையாது. இதனால் பிரிவு சாலைகளில் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இது பற்றி பேரூராட்சிகள் இயக்கு–னரகத்திற்கு சென்றது.
சென்னை பேரூராட்சி–களின் இயக்குனரின் உத்தரவின் பேரில் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளான பஸ் நிலையம், கடைவீதி, 4 ரோடு, ஜேடர்பாளையம் பிரிவு சாலை, பழைய பைபாஸ் சாலை, பள்ளி சாலை, மின் கம்பங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பிளக்ஸ் பேனர்களை வேலூர் பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் அகற்றினார்கள்.
பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா மேற்பார்வையில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.