விக்கிரவாண்டி அருகே ஏரியில் கொன்று புதைத்த வாலிபர் உடல் பிரேத பரிசோதனை
- கவியரசனும், ராம்குமாரும் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் உள்ள பாரில் மது அருந்தியுள்ளனர்.
- 5 பேருடன் ஏரியிலேயே பள்ளம் தோண்டி ராம்கு மார் புதைத்து விடுவது போலீசாருக்கு தெரிய வருகிறது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி வெங்க டேஸ்வரா நகரைச் சேர்ந்த வர் கவியரசன் (வயது 26). இவர் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் தீவிர விசாரணையில், ஆவுடை யார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நண்பர் ராம்குமார் (வயது 20) என்பவருடன் கவியரசன் சென்றது தெரிய வந்தது. ராம்குமாரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, கடந்த அக்டோபர் 2-ந் தேதி கவியரசனும், ராம்குமாரும் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் உள்ள பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ராம்குமாரை கவியரசன் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அக்டோபர் 5-ந் தேதி ஆவுடையார்பட்டு ஏரியில் அமர்ந்து ராம்குமார் அவரது நண்பர்கள் 7 பேருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது கவியரசனுக்கு போன் செய்து, நாம் சமாதானமாக சென்று விடலாம் என்று நைசாக பேசி ஏரிக்கு வர வழைத்துள்ளார். கவியர சனுக்கு மது வாங்கி கொடுத்து, அவருக்கு போதை ஏறியபின்பு ராம்குமார் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கவியரசனை தாக்கியு ள்ளனர். இதில் மயங்கி விழும் கவியரசன் இறந்து விடுகிறார். இதனை மறைக்க தனது நண்பர்கள் 5 பேருடன் ஏரியிலேயே பள்ளம் தோண்டி ராம்கு மார் புதைத்து விடுவது போலீசாருக்கு தெரிய வரு கிறது.
இதையடுத்து கவியரசன் உடலை மீட்பதற்காக ராம்கு மாரை ஆவுடையார்பட்டு ஏரிக்கு போலீசார் நேற்று அழைத்து சென்றனர். ஏரியின் மையப்பகுதியில் உள்ள முட்புதர் அருகே கவியரசனை புதைத்ததாக ராம்குமார் கூறினார். தொடர் மழையால் ஏரி நிரம்பி இருந்ததால், விக்கிரவாண்டி போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். தீயணைப்பு வீரர்களுடன் இணைந்த அந்து ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் ஏரியின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்றனர். அங்கு கவியரசனை புதைத்த இடத்தை அடையாளம் கண்டனர். இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இ்ன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகவலறிந்த விக்கிர வாண்டி வட்டாட்சியர் இளவரசன், ஏரியில் புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் வட்டாட்சியர் இளவரசன் முன்னிலையில் புதைக்க ப்பட்ட இடத்திலிருந்து கவியரசன் உடலை தோண்டி எடுத்து அங்கேேய அமைக்கப்பட்ட தற்காலிக கூடத்தில் முண்டியம்பா க்கம் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், ராம்குமார் உட்பட 3 பேரை கைது செய்துள்ள விக்கிர வாண்டி போலீசார். தலை மறை வாகியுள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.