உள்ளூர் செய்திகள்
தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
- போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
நாகப்பட்டினம்:
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் அகில இந்திய தடகள போட்டிகள் கோவாவில் நடைபெற்றது.
போட்டியில் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஜனனி என்ற மாணவி யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
வெற்றிபெற்ற மாணவியை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழும இணைச்செயலாளர் சங்கர் கணேஷ், துறை தலைவர் கணேசன், அருள் செல்வன், முதலாம் ஆண்டு துறை தலைவர் தீபா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.