- மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாளை விழிப்புணர்வு மையம் தொடங்குகிறது
- தற்கொலை எண்ணத்தை ஆரம்ப நிலையில் தடுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
மதுரை,
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நாளை (12-ந் தேதி) மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு மற்றும் மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கப்பட உள்ளது.
மதுரை அரசு மருத்துவ மனை வளாகத்தில் மனநல நல்லாதரவு மன்றத்தை டீன் ரத்தினவேலு தொடங்கி வைக்கிறார்.
இங்கு மருத்துவம், செவிலியர் மற்றும் மருத்து வம் சார்ந்த படிப்புக்கள் பயிலும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் தற்கொலை எண்ணத்தை ஆரம்ப நிலையில் தடுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு துறையிலும் மனநல வழிகாட்டியாக ஒரு உதவி பேராசிரியரும், மனநல தூதுவராக 2 மாண வர்களும் நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவ மாணவர்களின் மனநல ஆலோசனைக்காக 24 மணி நேர தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட உள்ளது. இதில் துணை முதல்வர், மருத்துவக்கண்கா ணிப்பாளர், செவிலியர் கல்லுாரி முதல்வர், மனநல மருத்துவர்கள், அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாண வர்கள் பங்கேற்கின்றனர்.