உள்ளூர் செய்திகள்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும்-அமைச்சர்

Published On 2022-09-11 08:18 GMT   |   Update On 2022-09-11 08:18 GMT
  • மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
  • தொழில் முதலீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களை கொண்டு வாருங்கள்.

மதுரை,

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டுவிட்டர், முகநூல் சமூக வலை தளங்களை பயன்படுத்தி வருகிறார். அதில் எழுப்பப்படும் கேள்வி களுக்கும் பதில் அளித்து வருகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தனியார் டிஜிட்டல் நிறுவனம் மற்றும் ஹால்டியா குழுமத்தினர் சந்தித்து தமிழகத்தில் தொழில் மூதலீடு குறித்து ஆலோசித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அப்போது ஒருவர், மதுரைக்கு நிறைய தொழில் முதலீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களை கொண்டு வாருங்கள். அப்போதுதான் சென்னை, கோவை, பெங்களூருவை போல மதுரையிலும் தொழில் வாய்ப்புகள் பெருகும்' என்று பதிவிட்டி ருந்தார்.

இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கையில், மதுரை யில் தொழில் முதலீடுகள் தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக நீண்ட காலம் வேலை பார்த்து வருகிறோம். நீங்கள் நினைப்பதை விட, மதுரைக்கு மிக விரைவில் நல்ல செய்தி வரும் என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News